குடைமிளகாயில் பல நோய்களை போக்கும்

குடைமிளகாயில் பல நோய்களை போக்கும், மருத்துவ குணம் இருப்பது இன்னும் விசேஷம்.

குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

செரிமானத்திற்கு... செரிமானப் பிரச்சனைகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.

நீரிழிவுக்கு...

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது குடைமிளகாய். இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.

வலிகளுக்கு... குடைமிளகாயில் உள்ல கேயீன் என்னும் வேதிப் பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.

இதயத்திற்கு... இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து இதய ஆரோக்கியத்தை குடைமிளகாய் அதிகப்படுத்துகிறது. இதய அடைப்பினால் தவிப்பவர்களுக்கும் இது ஒரு அருமருந்தாகும்.

நோயெதிர்ப்புக்கு... குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கர்வி என்னும் நோயைத் தவிர்ப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் குடைமிளகாய் வல்லது. குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!! 6/8 முதுகெலும்புக்கு... குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப் பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்பிற்குச் செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது. குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!! 7/8 கொழுப்பு குறைவதற்கு... குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கிறது. குடைமிளகாயைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம்!

முதுகெலும்புக்கு...

குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப் பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்பிற்குச் செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது.

குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கிறது. குடைமிளகாயைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம்!

குடை மிளகாயின் சுவை, கிராமத்து மக்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. பொதுவாக, குடை மிளகாய் தென்மாநில சமையல்களில் யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை.
ஆனால் சைனீஸ் வகை உணவுகளில் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக, பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மஞ்சூரியன், சில்லி பிரைடு ஐட்டங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஓட்டல்களில் பல வகை சாலட்கள் குடைமிளகாயில் தயாரிக்கப்படுகின்றன. உணவை அழகுபடுத்தவும் பயன்படுகிறது.
குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் உள்ளன. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவை குணமாக பயன்படுகிறது. கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும். அந்நோய்களை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.
பல்வலி, மலேரியா, மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் உள்ளது. குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை, குறைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்தும். இதில், கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். குடைமிளகாயில் உள்ள கேயீன் எனும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளை குறைக்கும்.
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடை
மிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து, 4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான வெண்ணெய் குடைமிளகாய் சாதம் ரெடியாகி விடும். குடை மிளகாய் சுவை சாப்பிட ஆரம்பத்தில் பிடிக்காது. சாப்பிட்டு பழகினால் அதன் சுவையை விட முடியாது.