சரும நிறம் ஒரே சீராக இருக்க - வெங்காயம்

வெங்காயம்

சரும நிறம் ஒரே சீராக இருக்கவும் பளபளப்பு பெறவும், இரண்டு சிறிய வெங்காயத்தை பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் கடலை மாவு, அரை ஸ்பூன் சந்தனப் பொடி, ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, சில சொட்டுக்கள் பால் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இக்கலவையை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு `ஜில்’ தண்ணீரில் முகம் கழுவவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், நிறத்தையும் கூட்டும்.