ஓம வெற்றிலை சூப்

ஓம வெற்றிலை சூப்
(உடல் எடை குறைக்கும் உணவுகள்)

தேவை

வெற்றிலை சாறு.. 1/4 கப்
ஓமம்... 1 தேக்கரண்டி
சுக்குப் பொடி... 1 தேக்கரண்டி
பூண்டு பேஸ்ட்...1 தேக்கரண்டி
வெண்ணை... 1 மேஜைக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம்...
1 மேஜைக்கரண்டி
சோள மாவு... 1 மேஜைக்கரண்டி
உப்பு... ருசிக்கேற்ப

செய்முறை:

வெற்றிலையின் காம்பு மற்றும் நரம்புகளை நீக்கி சிறிது நீர் சேர்த்து மிக்சியில் இட்டு இடித்து சாறு எடுத்து வைக்கவும்.

ஓமத்தை லேசாக வறுத்து பொடிக்கவும்.

வாணலியை சூடாக்கி வெண்ணையை உருக விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும். இதோடு பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை புரட்டவும். சுக்குப் பொடி மற்றும் ஓமப் பொடியையும் சேர்த்து, தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இந்த நிலையில் கரைத்து வைத்திருக்கும் சோள மாவை விட்டு நன்கு கிளறவும். பாதி அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இறுக்கி வடிகட்டி, அதோடு வெற்றிலை சாறை சேர்த்து தேவையான உப்பு சேர்த்துப் பரிமாறவும். இதற்கு தனியாக மிளகுப் பொடி சேர்க்க வேண்டாம்.

இந்த சூப்பை பருகிய சிறிது நேரத்தில் வாய்வு தொல்லை அகன்று, வயிறு உப்புசம் குறைந்து நன்கு பசி எடுக்கும்.

பலத்த விருந்து படைக்கும் முன்பும் இந்த சூப்பை அருந்தலாம்.