தும்பை !!!

தும்பை !!!

கரும்பச்சை நிறமுடைய இலைகளையும், வெந்நிறச் சிறுமலர்களையும் உடைய சிறுசெடி. இதன் இலை, பூ ஆகியவை மருத்துவக் குணமுடையது.

மருத்துவக் குணங்கள்:

இலை கோழையகற்றியாகவும், உடலுரம் பெருக்கியாகவும், வாந்தியுண்டாக்கியாகவும், பூ முறை நோய் அகற்றும் மருந்தாகவும் செயல்படுகிறது.

தும்பைப் பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி குளித்தால் தலைப்பாரம் நீரேற்றம் தீர்ந்து குணமாகும்.

அரைக்கைப்பிடியளவு தும்பைப் பூவைப்போட்டு சிறிதளவு தாய்ப்பால் விட்டு அரைமணிநேரம் கழித்து அந்த நீரில் கண்ணுக்கு இரண்டு துளிவீதம் காலை, மாலை விட்டுவர கண்ணோய் குறையும்.

தும்பை இலைச்சாற்றை மூன்று தேக்கரண்டியளவு காலை வேளையில் மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் மூச்சு வாங்குவது குறையும்.

தும்பை இலையை அம்மியில் வைத்து எலுமிச்சைப் பழச்சாறுவிட்டு மையாக அரைத்து எலுமிச்சைப்பழ அளவு எடுத்து 50 கிராம் நல்லெண்ணெய் கலந்து காலை வேளையில் கொடுக்க பெரும்பாடு நோய் குறையும்.

பாம்பு கடித்தவர்களுக்கு தும்பைச்சாறை நல்லெண்ணெயுடன் கலந்து கொடுத்தால் பாம்புக்கடி விஷம் குறையும்

தேள், நட்டுவாக்காளி ஆகியவைக்கடித்த விஷம் குறைய தும்பை இலையை அரைத்து உள்ளுக்கு கொடுத்து கடித்த இடத்தில் வைத்து தேய்த்தால் விஷம் குறையும்.

குடற் புழுக்களை வெளியேற்றும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். மாதவிலக்கு பிரச்சனைகள் குறையும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். சளியை இளக்கி வெளிப்படுத்தும்.