கழுத்து வலி/ கழுத்து இறுக்கம்

கழுத்து வலி/ கழுத்து இறுக்கம்:!!!

கழுத்து வலி/ கழுத்து இறுக்கம் வரும்போது, நாம் படத்தில் காட்டியுள்ளபடி கையில் பின்புறம் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் எலும்பு கீழே ஒன்று சேரும் இடத்தில் ( படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது) இலேசாக விட்டு விட்டு ஒரு நிமிடம் அழுத்தம் கொடுக்கவேண்டும். அழுத்தம் கொடுக்கும்போது நன்றாக மூச்சை இழுத்து விடவும். கழுத்தின் வலது பக்கம் வலி இருந்தால் இடது கையில் அழுத்தம் கொடுக்கவேண்டும். கழுத்தின் இடது பக்கம் வலி இருந்தால் வலது கையில் அழுத்தம் கொடுக்கவேண்டும். வலியைப் பொருத்து ஒரு மணி நேர இடைவெளியில் அழுத்தம் கொடுக்க விரைவில் வலி குறையும். மேலும் கழுத்தில் வலியுள்ள பாகத்தில் வெண்ணீரில் கொஞ்சம் எப்ஸம் உப்பு(EPSOM SALT ) கலந்து ஒத்தடம் கொடுக்க உடன் வலியிருந்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்