ஆவாரம்பூ

"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ"

ஆவாரம்பூ

“சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ
ரெல்லா மொழிக்கு மெருவகற்று - மெல்லவச
மாவாரைப்பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே
யாவாரை மூலியது.”

"மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்
ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்
ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்
எவாரைக் கண்மடமாதோ?"

இது ஒரு மொத்த மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். நமது உடலில் இருக்கும் பல மில்லியன் செல்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள் வருகின்றன என்பது நமது கீழை நாட்டு வைத்திய தத்துவம் . இது வெற்றியடைந்தால் செல்களுக்கு அழிவில்லை. என்றும் இளமைதான்

மதிப்புத்தேரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூப் பூத்து மண்டிக்கிடக்கிறது. இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள் ,பூ ,கிளைகள் ,காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது.

இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம் . இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதனுடன் நாவற்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன் படுத்தலாம் .அதிக பயன் தரும் .

உடலில் தேய்த்து குளித்தால் சிலர் மேனியில் வரும் மேனி வாடை போய் விடும் .சிறந்த தோல் காப்பான் .தொடர்ந்து பூசி குளித்து வர உடல் தங்கம் போல் ஆகும் .

இது தோல் வியாதிகள் அனைத்தயும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது . ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும். பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம். இதன் பூவை இனிப்புடன் கிளறி அல்வா செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், குறி எரிச்சல் நீங்கும். தகுந்த முறையில் உபயோகித்தால் நாம் முதுமையை வென்று ,நோயின் பிடியில் இருந்து தப்பி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் .