தேங்காய்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம்.
ஆனால்
தேங்காய் கொழுப்பு உடலுக்கு கேடு என்கிறது ஆங்கில மருத்துவம். இதுவே
ரீபண்ட் ஆயிலின் ஆதிக்கம் வருவாக காரணமாகின.

தேங்காயின் பயன்கள்.

1. உடல் இயக்கத்திற்க்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

2. சராசரியாக 400 கிராம் தேங்காயை சாபிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்க்கு நிகரான ஆற்றல் கிடைக்கும்.

3. தேங்காயில் உள்ள " லாவுரிக் ஆசிட் " எனும் கொழுப்பு அமிலம், உடல் இரத்தத்திற்க்கு தேவையான எச்.டி.எல் (HDL) லை அதிகரிக்க உதவுகிறது.

4. தேங்காய் நீரில் உள்ள " சைட்டோகைனைக் " முதுமையை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

5. தேங்காய் நீர் , இரத்தக் கட்டிகள், மற்றும் புற்றுக் கட்டிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது.

6. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.

7. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது .

8. தேங்காய் எண்ணெய்யை சமையலில் சேர்க்கப்பட்ட, உணவு எழுதில் ஜீரணமாகும்.

9. தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுதிறது.

10. தீக்காயம் பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய்யை தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.