லிங்க முத்திரை: Linga mudra

லிங்க முத்திரை: Linga mudra !!!
(mudra of heat and energy- சக்தி முத்திரை)

இரண்டு கை விரல்களையும் படத்தில் காட்டியபடி கோர்த்து பிணைத்துக்கொண்டு , இடது கை பெருவிரல் நேராக மேலே தெரியும்படி நீட்டிக்கொள்ளவும்.

இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம். ஆனால் தேவைப்படும்போது மட்டும் இந்த முத்திரை செய்யவேண்டும். நோய் குணமானவுடன் நிறுத்திவிடவேண்டும். உடலில் காய்ச்சல் இருக்கும்போது இந்த முத்திரை பயிற்சி கூடாது. வயிற்றில் அல்சர் பிரச்சனை இருந்தால் இந்த முத்திரை பயிற்சி செய்யக்கூடாது.

இந்த முத்திரை உடலில் அதிக உஷ்ணத்தை உண்டாக்குவதால் முத்திரை பயிற்சி முடிந்தவுடன் பழச்சாறு, மோர், தண்ணீர், பால் அதிக குடிக்கவேண்டும்.

லிங்க முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

• இது நுரையீரலுக்கு அதிக சக்தி கொடுக்கும்.
• நீண்ட நாட்களாக இருந்துவரும் தடுமன், இருமல், சளி, சைனஸ் நோய் குணமாகும்.
• கல்லீரலையும் வயிற்றுப்பகுதியையும் பலப்படுத்தும்.
• கெட்ட கொழுப்பை நீக்கும்,
• உடல் எடையை குறைக்கும்.
• ஆண்மைக்குறைவை போக்கி உயிர் சக்தி கொடுக்கும்.
• ஆஸ்துமா நோய் நீங்கும்.
• ஜீரண கோளாறுகள் நீங்கும்.
• பசியும் ஜீரண சக்தியும் நன்றாக இருக்கும்.
• நெஞ்சில் பாரமாக மற்றும் கணமாக இருப்பது குறையும்.
• குளிர் தன்மை அதிகமாக இருக்கும் இடத்தில் இந்த முத்திரை பயிற்சி உடலின்

குளிர்ந்த தன்மையை நீக்கி உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும்.
இந்த முத்திரையை தேவைப்படாத நேரத்திலும் தேவைக்கு அதிகமாகவும் செய்யக்கூடாது. நோய் குணமானவுடன் செய்வதை நிறுத்திவிடவேண்டும்.
நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.

நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.