சாப்பிடும்போது‬ குளிர்ந்த நீர் அருந்தலாமா?

சாப்பிடும்போது‬ குளிர்ந்த நீர் அருந்தலாமா?

'உணவு உட்கொண்டதும், குளிர்ந்த நீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைய அதிக வாய்ப்பு உண்டு. மேலும், நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்சிதைவு போன்றவை ஏற்படக் கூடும். சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய், ரத்த நாளங்களில் தங்கி அடைப்பை உண்டாக்கிவிடும். குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், சாப்பிடும்போது குளிர்ந்த நீரைப் பருகவே கூடாது. வெதுவெதுப்பான நீர் அருந்துவது, செரிமானத் திறனை மேம்படுத்தும்.