டீடாக்ஸ் டிரிங்

டீடாக்ஸ் டிரிங்..!!!

தேவையானவை:

ஆப்பிள் - 1, தக்காளி - 2, செலரி - 50 கிராம், வெள்ளரிக்காய் (பெரியது) - 1, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு. சுவைக்குத் தேவைப்
பட்டால், சிறிதளவு தேன்.

செய்முறை:
ஆப்பிள், வெள்ளரியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளி, செலரியை நன்கு சுத்தம்செய்து துண்டுகளாக நறுக்கவும். இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, ஐஸ் கட்டிகள் சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும். இதை வடிகட்டாமல் அப்படியே அருந்தலாம்.

பலன்கள்:
ஆப்பிளில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்டு அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை தக்காளியில் இருக்கின்றன. செலரியில் பொட்டாசியம், வைட்டமின் கே, மற்றும் ஃபோலேட் இருக்கின்றன. வெள்ளரியில் நீர்ச்சத்து இருக்கிறது. இவை அனைத்தும் இந்த ஜூஸில் கிடைக்கின்றன. ஆப்பிள், செலரி, வெள்ளரிக்காய் அனைத்துமே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை என்பதால், இந்த ஜூஸ் குடிப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். தக்காளியில் லூட்டின், லைக்கோபீன் மற்றும் பீட்டாகரோட்டின் இருப்பதால், புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவும். செரிமானக் குறைபாடுகளைச் சரி செய்யும். உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், அடிக்கடி குடித்துவந்தால் தேகம் பொலிவு அடையும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை இருப்பவர்கள், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோய் இருப்பவர்களுக்கு, இந்த ஜூஸ் நல்ல பலன் அளிக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். இதய நோய்களைத் தடுக்கும்.