பெற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்

பெற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்!*



1. *பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள்.* அரட்டையிலோ,சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப் படுத்தாதீர்கள்!

2.மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம். *எல்லோருக்கும்அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள*.

3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு", "தொணதொணன்னு கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, *அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!*

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த *வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர்வீட்டு முகவரி உட்பட.*

5. வாகன ஓட்டுனரின் *நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!*

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், *மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து,மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும் சில இடங்களில் நடக்கிறது.*

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று *குழந்தைகளுக்கு தெளிவு படுத்துங்கள்.*

8. *குழந்தைகள், வீட்டின் முகவரி,பெற்றோரின் தொலைபேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்*.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், *ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!*

10. ஒரு கட்டத்திற்கு மேல், *உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.*

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது *வன்முறை, காதல், கொலை, கொள்ளை போன்றவை நிறைந்த திரைக் காட்சிகளையோ, கண்ட நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!*

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், *குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,
அல்லதுஅவர்களுக்கு பொது அறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.*

13. குழந்தைகளிடம் தினமும் நேரம் செலவிடுங்கள். *ஒருதோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.*

14. *தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள்.* தண்டிக்க நினைக்காதீர்கள்!.

15. ஒரு முறை நீர் ஊற்றியவுடன்,விதை மரமாகி விடாது. *நீங்கள் ஒரு முறை சொன்னவுடன்குழந்தைகள் உங்கள் விருப்பப் படி மாறி விட மாட்டார்கள்.உங்களுக்கு பொறுமைஅவசியம்.*

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன்அரவணைத்து, வேண்டியது செய்ய *அம்மாவோ,பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!*

17. *குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள்.* பின்னாளில் அவர்கள் உங்களைப் பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், *உங்கள் பிள்ளைகளால் கவனிக்கப்படுகிறது.* நாளை உங்களுக்கும் அதுவே நடக்கலாம்!.

19. படிப்பு என்பது அடிப்படை. அதையும் தாண்டி *குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.*

20. *ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அவசியம்.* விளையாட்டிற்கு தடை போடாதீர்கள்.
நன்கு விளையாடும் பிள்ளைகளுக்கும்,
ஆரோக்கிய உணவு சாப்பிடும் பிள்ளைகளுக்கும் எந்த தடுப்பூசியும் தேவை இல்லை.

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும். *அவர்களின் வயதுக்கேற்ப புரியும் படி பதில் சொல்லுங்கள்!* பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது *தெரிந்தால் சொல்லுங்கள்,தெரியா விட்டால் பிறகு சொல்கிறேன் என்று சொல்லுங்கள். சொன்ன படி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது மிக அவசியம்.*

22. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை. *நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ,பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.*

23. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், *"Good touch, "Bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.*

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே *சண்டை இடாதீர்கள்!*

25. ஒவ்வொரு குழந்தையும் இறைவனின்வரம். அவர்கள், *ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின்  வடிகால்கள்அல்ல!*

*உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் படித்துக் காட்டுங்கள்.*