வாய் துர்நாற்றம் தவிர்க்க எளிய வழிகள்

வாய் துர்நாற்றம் தவிர்க்க எளிய வழிகள்


பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link


பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது வாய் துர்நாற்றம். நெருங்கிப் பழகுகிறவர்களே சொல்லத் தயங்கும் பிரச்னை; நெருக்கமானவர்களை முகம் சுளிக்கவைக்கும் சங்கடம். இந்தப் பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால்,  தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இதைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் முடியும்.

வாய் துர்நாற்றத்துக்கு என்ன காரணம்?

வறளும் வாய்

வாய் அடிக்கடி வறண்டு போவது `க்சீரோஸ்டோமியா’ (Xerostomia) என்று அழைக்கப்படுகிறது. இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும். தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவை வாய் வறண்டு போவதற்கான காரணங்களாகும்.

உணவுகள்
பூண்டு, வெங்காயம் போன்ற உணவு வகைகளில் மணமுள்ள சல்ஃபர் உள்ளது. பால், இறைச்சி, மீன் போன்றவற்றில் அடர்த்தியான புரதம் உள்ளது. இவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன. காபி, ஜூஸ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவையும் இந்த பாக்டீரியாக்கள் உருவாகக் காரணமாகின்றன.

பல் துலக்குதல்

பல் பராமரிப்பின்மை
இறந்த செல்களை தோல் தானாகவே வெளியேற்றுவதுபோல், பல்லால் வெளியேற்ற இயலாது. பல்லை தினமும் சுத்தம் செய்வதன் மூலம் மட்டுமே பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். பல் பராமரிப்பில் கவனக்குறைவாக இருந்தால், வெளியேற்றப்படாத பாக்டீரியாக்கள் பல்லின் மேல் படலமாகப் படிந்துவிடும். இது `பற்காரை’ எனப்படும். இதுதான் துர்நாற்றத்துக்கு காரணமாக அமையும்.

நோய்கள்

சிறுநீரக நோய்கள்,  நுரையீரல் நோய்கள், கல்லீரல் நோய்கள், புற்றுநோய், சர்க்கரைநோய் பிரச்னைகள் இருப்பவர்களின் வாய் சீக்கிரம் வறண்டு போகும். எனவே இவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை ஏற்படும். நோய்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகளின் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
துர்நாற்றம் போக்க என்ன வழி?

தண்ணீர்

போதுமான அளவு தண்ணீர் குடித்தால், வாய் வறண்டுபோவதைத் தடுக்க முடியும்.  வாயில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களும் உணவுத் துகள்களும் வாய் துர்நாற்றத்துக்கான முதன்மைக் காரணங்களாகும். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடித்தால், இவை வாயிலிருந்து வெளியேற்றப்படும்.

புகைபிடிப்பதைக் கைவிடுதல்

சிகரெட், புகையிலை சார்ந்த பொருள்கள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். புகையிலைப் பொருட்கள் வாயை வறண்டு போகச் செய்து துர்நாற்றத்தை வாயிலேயே தங்கியிருக்கச் செய்துவிடும். 

இருமுறை பல் துலக்குதல்

தினமும் இரண்டு முறை பல் துலக்குவது பல் இடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுப் பொருள்களை வெளியேற்றவும், பல்லில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கவும் உதவும். இரவு தூங்கப்போவதற்கு முன்னர் ஒரு முறை பல் துலக்கவேண்டியது மிகவும் அவசியம்.

வாய் நாற்றம்

வாய் கொப்பளித்தல்
பிளாக் டீ அல்லது கிரீன் டீயில் வாயைக் கொப்பளிப்பதால், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும் எனக்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெயைக் கலந்தும் வாய் கொப்பளிக்கலாம். பல் சார்ந்த பிரச்னைகள் மூலம் வாய் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தால், இது நிரந்தரமான தீர்வு தராது. தற்காலிகமாக வாய் துர்நாற்றத்தைக் குறைக்கும். சில வேளைகளில் இது நிலைமையை மோசமாக்கவும்கூடும்.

மிட்டாய்

மிட்டாய்கள், பபுள் கம்களை சாப்பிடுவதால் அதிக அளவில் எச்சில் சுரக்கும். இதனால் வாய் வறண்டு போகாது. உற்பத்தியாகும் எச்சில் வாயிலுள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். இதனால் துர்நாற்றம் குறையும். சர்க்கரைநோயாளிகள் இவற்றைத் தவிர்த்துவிடலாம். இதேபோல் கிராம்பு, சீரகம் போன்றவற்றையும் மெல்லலாம்.

காய்கறி, பழங்கள்

உணவு உண்ட பிறகு கேரட், ஆப்பிள் போன்றவற்றைச் சாப்பிட்டால், எச்சில் சுரப்பு அதிகமாகும். இதனால் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும். காலையிலிருந்து சாப்பிடாமல் வெறும் வயிற்றிலேயே இருந்தால், வயிற்றில் அமிலச் சுரப்பு உண்டாகும். இதுவும் துர்நாற்றத்துக்குக் காரணமாக அமையும். இதற்கும் பழங்களும், காய்கறிகளும் நல்ல தீர்வு தரும்.

நாக்கைச் சுத்தம் செய்தல்

நாக்கின் சுவை நரம்புகளில் சேர்ந்துள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுவது துர்நாற்றத்தைப் போக்க உதவும். இதற்குக் கடைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சுத்தப்படுத்தும் கருவியை (Tongue cleaner) வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது பிரெஷ் பயன்படுத்தியும் நாக்கைச் சுத்தம் செய்யலாம்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றியும் வாய் துர்நாற்றம் நீங்கவில்லையென்றால், பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். வாய் துர்நாற்றம் ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம் என்பதால் மருத்துவரைச் சந்திக்கத் தயங்கக் கூடாது.