உளுந்துப் பொடி

உளுந்துப் பொடி
இதற்க்கு தேவையானவை:
உளுத்தம் பருப்பு - கால் கிலோ,
காய்ந்த மிளகாய் - 10,
சீரகம் - 5 கிராம்,
காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம், ஓமம் - 10 கிராம்,
பெருங்காயம் - 5 கிராம்.
எப்படி செய்வது:
அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
இதன் மருத்துவப் பயன்:
உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு.
சிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது.
கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.