உள்ள‍ங்கை உள்ள‍ங்காலில் அதீத வியர்வை தொல்லையா?

உள்ள‍ங்கை உள்ள‍ங்காலில் அதீத வியர்வை தொல்லையா?


 அதனை கட்டுப்படுத்த ஓரெளிய வழி
வியர்வை என்பது நமது உடலில் இருக்கும் அதீத வெப்ப‍த்தை வெளிப் படுத்தி, உடலை தேவையான அளவிற்கு
குளிச்சியாக வைத்துக்கொள்ள‍ இயற்கை அன்னை நமக் கருளிய வரம் தான் இந்த வியர்வை.  சிலரு‌க்கு உடலில் இருக்கும் வியர்வை சுரப்பிகளைவிட அவர்க ளின் உ‌ள்ள‌ங்கை, உள்ள‍ங்காலில் அ‌திக‌ப்படியான ‌ விய‌ர்வை சுரப்பிகள் இருக்கும் இதனால் உடலில் பிற பகுதிகளில் வெளியேறும் வியர்வையின் அளவைவிட உள்ள‍ங்கை உள்ள‍ங்காலில் அதிகமாக வியர்வை சுரக்கும் இதனால் அவர்களால் எழுதவும் முடியாது. எங்கேனும் நடந்தாலு ம், காலில் அதீதஅழுக்குகள்சேர்ந்து பார்ப்ப‍தற்கு அருவரு ப்பாக இருக்கும்.
இதுபோன்று உள்ள‍ங்கைகளிலும் உள்ள‍ங்கால்களிலும் சுரக்கும் அதிகப்படியான வியர்வையை கட்டுப்படுத்த‍ ஓரெளிய வழி உண்டு. ஆம் இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிச்சாறு, தேன் ஆ‌கிய மூ‌ன்றையு‌ம் சம அளவாக எடுத்து கலந்து 1 தேக்கரண் டியளவு (5மில்லி) ‌தினமு‌ம் 2வேளை குடித்து வர உடல் சூடு தணியு‌ம். இதனா‌ல் அதிகப்படியான வியர்வை க‌ட்டு‌ப்படு‌ம்.