குடற்புண் (அல்சர்)

குடற்புண் (அல்சர்)

பெரும்பான்மையான மக்கள் காலை எழுந்தவுடன் காபி, டீ போன்ற கொதி குடிநீர் பானம் அருந்துவதனை வழக்கமாக கொண்டுள்ளனர். இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய பழக்கம். காரணம் காலை எழுந்தவுடன் குடல் பகுதியினை இத்தகைய தேனீர், காபி போன்ற சூடு செய்யப்பட்ட பானங்கள் அருந்துவதால் குடல் புண் உருவாக காரணமாகின்றன.

இதற்கு பதிலாக குளிர்ந்த குடிநீர் அல்லது மோர் அருந்துவது குடலுக்கு குளுமையை கொடுக்கும். ஆறவைத்த குடி நீரில் தேன் கலந்து குடிக்கலாம்.

மேலும் குடல்புண் உள்ளவர்கள் ஊறுகாய், எண்ணெயில் பொரித்த உணவுகள், புளி மற்றும் சீனி, சர்க்கரை இனிப்பு போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

இரவில் தயிர், பால் கண்டிப்பாக கூடாது. மேலும் நொதி ஏற்படும் படியான( அதாவது புளித்த மாவுகளில் செய்யப்பட்ட) இட்லி, தோசையை தவிர்க்க வேண்டும். படபடப்பு அடைதல், சரியாக தூங்காமல் கண் விழித்து இருத்தல் போன்றவை தவறு.

மணத்தக்காளி, முருங்கை, வெந்தயக்கீரை, பூசணிச்சாறு, நெல்லிக்காய், அருகம்புல் சாறு வெள்ளரி, வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, சீதாபழம், பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவைகளை அதிகமாக உணவாக சேர்க்க வேண்டும்.

முருங்கை இலைப்பொடி, அருகம்புல் பொடி, முளைக்கட்டி காயவைத்து தயாரித்த வெந்தயப்பொடி போன்றவைகளை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

குடற்புண்ணிற்கு தப்பான உணவே அடிப்படைக்காரணம். அதாவது அளவான சாப்பாடுதான் வளம் கூட்டும்.

இளநீர் மட்டும் அருந்த வேண்டும். (இளநீர் வழுக்கை சேர்க்கக் கூடாது). புதிய இளநீர் தான் சிறப்பு.

சீரகம்
*********

சீரகம் ஒரு அற்புதமான மருந்து. ஆம் அல்சர் என்னும் குடற்புண்ணை தடுப்பதே சீரகம்தான். இந்த சீரகம் இரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தும்.

தினமும் இரவில் ஒரு சொம்பு நீரை நன்றாக காய்ச்சி இறக்கி வைத்து அதில் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு மூடி வைத்து விடுங்கள், மறு நாள் காலை எழுந்து பல் துலக்கி அதனை வடிகட்டி அந்த நீரை மட்டும் வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர குடற்புண் சீக்கிரம் ஆறும்.

நல்லெண்ணெயில் சீரகம் போட்டு காய்ச்சி எண்ணெய்க்குளியல் வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்வது உடலின் பித்தநிலையை குறைக்கும்.

வில்வம்
*************

வில்வ இலை, வில்வ மரப்பட்டை, வில்வ வேர் போன்றவைகளை சூரணமாகவோ, கஷாயமாகவோ உட்கொண்டுவர ஆறாத குடற்புண் ஆறிவிடும். அல்சரின் அருமருந்து வில்வம்.

குறிப்பு:-
--------------

அல்சருக்கு சீரகவில்வாதி லேகியம் மிகச்சிறந்த மருந்து.