வாழையின் மகத்துவம்

வாழையின் மகத்துவம் !!!

மலச்சிக்கல் நோயால் அவதியுறுவோர் பூவன் பழமும், வயிற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் பேயன் பழமும், விரைவாக ஜீரணமடைய மலைவாழைப் பழமும் சாப்பிடலாம். ரஸ்தாளி வாழையில் சுவை மிகுதி. ஆனால் சத்து மிகவும் குறைவு.


வாழைத்தண்டு: தோல் நோய்கள், ரத்தத்தில் உண்டாகும் தொற்றுநோய்கள், சொரியாசிஸ் போன்ற குறைபாடுகளுக்கு வாழைத்தண்டு பயன்படுத்தலாம்.


வாழைச்சாறு: வயிற்றுப் போக்கு, ரத்த மூலம், கை, கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறுகள், கோழை சுரப்பு அதிகரிப்பு, குடல் புண் இவற்றுக்கு வாழைச்சாறு அருந்தலாம்.


வாழைக் குருத்து: தீக்காயம், வெந்நீர் மற்றும் சூடான எண்ணெய் பட்ட காயங்களுக்கு குருத்து வாழை இலையைச் சுற்றி காயத்திற்குக் கட்டுப் போடலாம்.


வாழைப்பூவையும் கசக்கிப் பிழியலாம் காயம் பட்ட புண் குணமாகும்.


அஜீரணம், மூலநோய்களுக்கு பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர சரியாகும்.


வாழைப்பழம்: வாழைப்பழம் இளக்கும் தன்மை கொண்டது. இதில் கால்சியம், பொட்டாஷியம், சோடியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. எனவே மகத்துவமும் மருத்துவக் குணநலனும் உடைய வாழைப்பழத்தை தினசரி எடுத்துக் கொள்வது நல்லது.