குழந்தைகளுக்கு சில வீட்டு மருந்துகள்

குழந்தைகளுக்கு சில வீட்டு மருந்துகள்!!!

#அடிக்கடி மலம் கழிக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு உள்ள குழந்தைகளுக்கும் மருந்து:

காய வைத்து பொடி செய்த மாதுளம் பூத் தூள் இரண்டு சிட்டிகை, காய்ந்த மிளகாய் தூள் ஒரு சிட்டிகை எடுத்துக்கொண்டு ஸ்பூன் நெய் மற்றும் பனை வெல்லம் அல்லது சாதாரண வெல்லம் சுவைக்குச் சேர்த்து அனைதையும் ஒன்றாக்க் கலந்து குழந்தைகளுக்குக் கால் ஸ்பூன் அளவுக்குக் கொடுத்தால் வயிற்றுப் போக்கு குணமாகும். மிகச் சிறிய குழந்தைகளுக்கு விரலில் தொட்டு நாக்கில் தடவினாலும் போதும். குணம் தெரியும். மாதுளம் பூ கிடைக்கவில்லையானால் மதுளம் பழத் தோலை காய வைத்துப் பொடி செய்தும் உபயோகிக்கலாம்.

#குழந்தைகளின் திக்குவாய் குறை நீங்க மருந்து :

குழந்தைகளுக்கு திக்கு வாய் ஏற்பட முக்கிய காரணம் குழந்தைகளின் பய உணார்வே. இதற்கு வசம்பு சிறிதளவு , வில்வம் சிறிது, தேன் சிறிது அருகம்புல் சிறிது இவற்றை எடுத்துக் கொண்டு வில்வம், அருகம்புல் இரண்டையும் பசையாக்கிக் கொண்டு, வசம்பை இழைத்து அவற்றுடன் தேனையும் சேர்த்து திக்கு வாயுள்ள குழந்தையின் நாக்கில் தடவினால் சில நாட்களில் திக்கு வாய் மறைந்து நல்ல குரல் வளம் பெருகும். பெரியவர்களுக்கு நாக்கில் தடவினால் மட்டும் போதாது. சிறிதளவு உள்ளுக்கும் சாப்பிடவேண்டும். உள்ளுக்குச் சாப்பிடும் போது குடலையும் சுத்தம் செய்து விடும்..

#குழந்தைகளின் வயிற்றில் பூச்சிகள் இருந்தால் வெளியேற்ற மருந்து :

குழந்தைகள் வயிற்றில் பூச்சி இருந்தால் குழந்தைகள் இரவு சுமார் ஏழரை மணியளாவில் தமது ஆசனவாயில் விரலை வைத்து தேய்ப்பார்கள். அதனைப் பார்த்தே குழந்தைகள் வயிற்றில் பூச்சி உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். இதற்கு மருந்தாக ஒரு டம்ளர் தண்ணீரில் இருபது அல்லது இருபத்தைந்து குண்டு மல்லிகை பூக்களைப் போட்டுகொதிக்க வைத்து தேநீராக்கி கொடுத்தால் குடலில் உள்ள புழுக்கள் மலத்தின் வழியாக வெளியேறிவிடும். இந்த மருந்தை மன உளைச்சல், மன அழுத்தம் உள்ள பெரியவர்களும் இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களும் உட்கொண்டால் இரவில் நல்ல தூக்கம் வரும். இரவில் இந்த தேநீரைக் குடித்துவிட்டு காலையில் எழும் போது மிகவும் புத்துணர்ச்சியாக, சுடுசுறுப்பாக இருக்கும்.

#குழந்தைகளின் நெஞ்சுச் சளிக்கு மருந்து :

குழந்தைகளைக் குளிக்கவைத்ததும் தேங்காய் எண்ணேயை உடல் முழுதும் தேய்த்துஒரு ஐந்து நிம்டம் ஆறவைத்து பிறகு உடைகள் அணிவிப்பது முன்பு பழக்கமாக இருந்தது. இதனால் குழந்தைகள் மழையில் நனைந்தாலும் சளி பிடிக்காத ஒரு நிலை இருந்தது. ஆனால் இந்த பழக்கம் இப்போது இல்லாமல் போனதால் குழந்தைகளுக்கு அடைக்கடி சளித் தொல்லை வருவது வாடிக்கை ஆகி விட்டது. இந்த தொல்லையில் இருந்து விடுபட சுக்குத் தூள் ஒருசிட்டிகை, மிளகுத் தூள் ஒரு சிட்டிகை மற்றும் ஒரு கற்பூரவல்லி இலையைச் மிக்ச் சிறு பொடியாக்கி இந்த கலவையுடன் தேன் சேர்த்து சிரப் (SYRUP ) ஆக்கி சிறு குழந்தைகளுக்கு விரலில் தொட்டு நாக்கில் தடவினால் நெஞ்சுச் சளி குணமாகும்