உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் சௌசௌ காய்

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் சௌசௌ காய் !

நாம் உண்ணும் உணவில் சில காய்கறிகளை எப்பொழுதாவது தான் பயன்படுத்துவோம்.
அப்படி நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றுதான் சௌசௌ.
100 கிராம் சௌசௌவில் காணப்படும் சத்துக்கள்
விட்டமின்கள் – A B1 C K
கார்போஹைட்ரேட் – 17.8 %
ஸ்டார்ச் – 10.7 %
போலேட் சத்து – 10.5 %
புரதச்சத்து – 5.4 %
சுண்ணாம்புச்சத்து – 6.7 %
பாஸ்பரஸ் – 4.8 %
மாங்கனீஸ் – 9 %

#நன்மைகள்

1. நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
2. வயிறு சம்பந்தமான நோய்களை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
3. உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைக்கும்.
4. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
5. பெருங்குடல், சிறுகுடல் சம்மந்தமான நோய்களை நீக்கி குடல் பாதைகளை சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
6. கர்ப்பிணிகளுக்கு கை கால்களில் வீக்கம் ஏற்படுவதால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
7. முகச்சுறுக்கம் நீங்கும்.
8. சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு போன்ற சத்துக்கள் தைராய்டு நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.

#குறிப்பு
வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் உண்ணும் உணவில் சௌசௌவை பொரியல் செய்தோ, குழம்பிலிட்டோ அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சூப் செய்தோ குடிக்கலாம்.
இதனால் பல்வேறு வியாதிகளும் குணமடையும்.