மூக்கில் நீர் வடிகிறதா?

மூக்கில் நீர் வடிகிறதா?

ஒரு சிலருக்கு வெயில், மழை என எந்த காலநிலையிலும் மூக்கு அரிப்பு ஏற்பட்டு, ஒருவித எரிச்சலுடன் நீர் வழிந்துக் கொண்டே இருக்கும்.

இதனால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எந்த காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலாது.

இப்போதெல்லாம் 'அச்...' என்று தும்பினாலே போதும் மருத்துவரிடம் சென்று விடுகிறார்கள். இது மிகவும் தவறான அனுகுமுறை. இயன்ற அளவு வீட்டிலேயே கை வைத்தியத்தை செய்து இவற்றை சரிசெய்து கொள்ளலாம்.

நம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே மூக்கில் நீர் வடிதலை சரிசெய்யலாம்.

சாம்பாருக்கு பயன்படுத்தும் சிறிய வெங்காயம் தோல் சீவியது 5, சிறிதளவு துளசி, பொறி கடலை(உடைத்த கடலை) சிறிதளவு, சிறிது சிறிதாக நறுக்கிய 10 முள்ளங்கி துண்டு , 20 மிளகு இவற்றை ஒன்றாக கலந்து நேரடியாகவே சாப்பிடலாம். நேரடியாக எடுத்துக் கொள்ளும் போது மூக்கில் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்தி முகமெல்லாம் வேர்க்க தொடங்கும். இதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் தலைபாரம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் இவற்றை கட்டுப்படுத்தும். அதன் பின்பு மூச்சு விடுவதற்கு சுலபமாக இருக்கும்.

நம்மால் இயன்ற அளவு கை வைத்தியத்தை செய்து பார்க்கலாமே......