மாமரத்தின் துளிர் முதல் வேர் வரை மருத்துவ பயன்கள்

மாமரத்தின் துளிர் முதல் வேர் வரை மருத்துவ பயன்கள்!!

மாமரத்துப் பகுதிகள் மருந்தாகும் விதம் :
* மாமரத்தின் மலர்களைச் சேகரித்து இளம் வறுப்பாய் வறுத்து சூரணித்து வைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர இரண்டொரு நாளில் பேதியையும் கட்டும். சுப பித்தங்களைத் தணிக்கும்.
* மாமரத்தின் துளிர் இலைகள் ஐந்தாறு எடுத்து அதற்கு சம அளவு நாவல் மரத்துளிர் இலைகள் சேர்த்து நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து ஆறவைத்து சிறிது தேன் சேர்த்து பருக வாந்தியை நிறுத்தும்.
* மாம்பட்டைத் தூளுடன் தேனும் பாலும் கலந்து சாப்பிட ரத்த அதிசாரம் என்கிற ரத்தபேதி, ரத்தக்சிவு குணமாகும்.
* மாம்பழச்சாற்றோடு தேன் கலந்து சில நாட்கள் சாப்பிட்டு வர மண்ணீரல் வீக்கத்தால் தோன்றிய பெரு வயிறு என்னும் மகோதா நோய் குணமாகும். மாமரத்துளிர் இலைகளை பத்து எண்ணிக்கையில் எடுத்து ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு அதில் மாந்துளிர்களைப் போட்டு இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் இலைகளைக் கைகளால் நன்கு கசக்கி அதன் சத்துவத்தை ஊறவிட்ட நீரிலேயே பெருகும்படி செய்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர ஆரம்ப கால சர்க்கரை நோய் தணியும்.
* மாவிலைகளைப்பறித்து சுத்திகரித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு அன்றாடம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் அரைத் தேக்கரண்டி அளவுக்கு சாப்பிட்டு வர சர்க்கரை நோய் தணியும்.
* மாங்கொட்டைகளை உடைத்து உள்ளிருக்கும் பருப்பினை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரண்டு வேளை ஒன்று முதல் இரண்டு கிராம் அளவுக்கு தேனை அனுபானமாகக் கொண்டு உள்ளுக்கு கொடுத்து வர பேதியை நிறுத்தும். புதிதாக சேகரித்த மாம்பூக்களை இடித்து சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சாற்றுடன் தயிர் கலந்து உள்ளுக்குக் குடிக்க வயிற்றுப் போக்கு வற்றும்.
* மாங்கொட்டைப் பருப்பு பெண்களின் இனஉறுப்புக் கோளாறுகள் பலவற்றிற்கு மருந்தாகிறது. மாம்பருப்பு புதியதாக நன்கு ஈரப்பசையுடைதாக எடுத்து மைய அரைத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து இரவு படுக்க போகும் முன் பெண் உறுப்புக்குள்ளாகத் திணித்து வைக்க வெள்ளைப் போக்கு பெண்ணுறுப்பினுள் ஏற்பட்ட வீக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவசத்தால் ஏற்பட்ட யோனி அழற்சி ஆகியன குணமாகும்.
உடலுறவுக்கு முன் அரை மணி நேரத்துக்கு முன்பாக மாங்கொட்டைப் பருப்பை பசையாக அரைத்து உட்சாறாகப் பயன்படுத்த கருத்தடை சாதனமாக அமையும். பச்சை மாம்பட்டையை இடித்து பத்து முதல் இருபது மி.லி வரை உள்ளுக்கு கொடுக்க மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் அதி ரத்தப் போக்கு குணமாகும். மேலும் வெள்ளைப் போக்கு, மற்றும் சீழ் வெளியாதல், கருப்பை அழற்சி ஆகியன குணமாகும்.
* 10 மி.லி மாம்பட்டை சாற்றோடு 120 மி..லி நீர் சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதாலும் வெள்ளைப்போக்கு, உதிரப்போக்கு பேதி ஆகியன குணமாகும்.
* உலர்ந்த மாம்பருப்பு தூளால் பல் துலக்கி வர ஈறுகள் பலப்படும். பல் உறுதி பெறும். பயோரியா போன்ற நோய்கள் பறந்து போகும்.