தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை !!!

வாய்வு தொல்லையை ஏற்படுத்தும்உணவுகள்


முள்ளங்கி
அதிகப்படியான வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் முள்ளங்கி. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முள்ளங்கியை சாப்பிட வேண்டாம்

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் கூட வாய்வு தொல்லையை ஏற்படுத்தும். இருப்பினும் முட்டைக்கோஸ் தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால், முட்டைக்கோஸ் சாப்பிட்டால், நான்கு மணிநேரத்திற்கு பின் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.

காலிஃப்ளவர்
காலிஃப்ளவரும் வாய்வு தொல்லையை ஏற்படுத்தும். எனவே இந்த காய்கறியையும் தவிர்ப்பது நல்லது.

ப்ராக்கோலி
ப்ராக்கோலி கூட முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் குடும்பத்தைச் சேர்ந்தது. எனவே இதனை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த காய் கசப்பாக இருப்பதால், இதனை தாய்மார்கள் உட்கொள்ளும் போது, அது தாய்ப்பாலை கசப்பாக்கி, குழந்தைக்கும் வாய்வு தொல்லை ஏற்படுத்தும்.
குடைமிளகாய்
குடைமிளகாய் மற்றும் இதுப்போன்று காரமான உணவுப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது

பீன்ஸ்
எவ்வளவு தான் மார்கெட்டில் பீன்ஸ் அதிகம் விற்கப்பட்டாலும், எத்தனை நன்மைகள் நிறைந்திருந்தாலும், இதனை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது குழந்தைக்கு உப்புசத்தை ஏற்படுத்தி, அசௌகரியத்தை ஏற்படுத்திவிடும்.

உருளைக்கிழங்கு
அனைவருக்குமே உருளைக்கிழங்கு வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் உணவுப்பொருள் என்பது தெரியும். ஆனால் இத்தகைய உருளைக்கிழங்கை அளவாக தோலுடன் சாப்பிட்டால், வாய்வு தொல்லை சற்று குறைவாகத் தான் இருக்கும். இருப்பினும் குழந்தைக்காக இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது.


வலி நிவாரணி ஆபத்து

உயிரை பாதிக்கும்
பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத் தக்கது.
பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்தவேண்டும் . உண்ணும் உணவின் மூலமும், மருந்துகளின் மூலமும் உடலில் கலக்கும் ரசாயன பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே. அதனால்தான் பிரசவகால பத்தியம் கூட தாய்மார்கள் மேற்கொள்கின்றனர்.

தாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்மார்கள் தங்கள் வலியைப் போக்க அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாய்ந்து உயிரையும் பறித்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பாலூட்டும் அன்னையர்கள் தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.